சுகாதார சீர்கேடான மரப்பூங்கா

Update: 2026-01-04 13:29 GMT

தர்மபுரி ரெயில் நிலைய நுழைவு வாயில் அருகே தொடங்கும் மரப்பூங்கா தர்மபுரி-சேலம் சாலை இணையும் பகுதியில் முடிவடைகிறது. ரெயில் நிலையத்திற்கு செல்லும் இருவழி சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த மரப்பூங்காவில் குப்பைகள், கழிவுப்பொருட்கள் அதிக அளவில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதியின் சுற்றுச்சூழலும் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மரப்பூங்காவை சீரமைக்கவும், இங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்