கோவை மாநகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட வெள்ளக்கிணறு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 2-வது பகுதியில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. ஆங்காங்கே புதர் சூழ்ந்து காணப்படுகிறது. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளது. இதனால் அங்கு வந்து செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் காணப்படுகிறது. எனவே புதர் செடிகளை அகற்றி பூங்காவை பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.