சேதம் அடைந்த சிறுவர் பூங்கா

Update: 2025-11-02 17:32 GMT

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட கே.வி.டி. நகரில் பொட்டிநாயுடு தெரு விரிவு பகுதியில் ரூ.41 லட்சத்தில் கட்டப்பட்ட சிறுவர் பூங்கா சேதம் அடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் விளையாட்டுச் சாதனங்கள் மற்றும் பெரியவர்கள் பயன்படுத்தும் நடைபாதை சேதம் அடைந்துள்ளன. பூங்காவில் உள்ள கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. சிறுவர் பூங்காவை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.சுரேஷ், சமூக ஆர்வலர், வந்தவாசி.

மேலும் செய்திகள்