சென்னை அடையாறு பகுதியில் ஒரு தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதிகமான பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் இந்த தபால்நிலையத்தின் சில இடங்களில் மேல்பூச்சு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு வரும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட தபால் நிலைய அதிகாரிகள் நிலையத்தை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.