திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பெரிய களக்காட்டூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். பலர் கிராமத்தில் வீடுகள் அருகே குப்பையை கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.