வேலூர் மாநகராட்சி ஊழியர்களால் சைதாப்பேட்டை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சுருட்டுக்கார தெரு அருகில் விநாயகர் நகரில் கொட்டப்படுகிறது. இதற்கு அருகில் மின்வாரிய அலுவலகம், தபால் நிலையம் போன்றவை உள்ளன. இதை சுற்றி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றனர். குப்பைகளால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைகளை உடனுக்குடன் அகற்ற முன்வர வேண்டும்.
-மகேஷ், வேலூர்.