அரக்கோணம் மேட்டுத்தெருவில் இருந்து காந்திநகர் செல்லும் பகுதியில் பாலசுந்தரம் தெரு கோடியில் மூட்டை மூட்டையாக குப்பைகளை கட்டி வந்து வீசி செல்கிறார்கள். அவ்வாறு வீசப்பட்ட குப்பைகள் குவியலாக உள்ளது. குப்பைகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் நேரில் பார்வையிட்டு குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகசுந்தரம், அரக்கோணம்.