மதுரை நகர் சுந்தரராஜபுரம், டி.வி.எஸ்.நகர், கோவலன் நகர் ஆகிய பகுதிகளில் சாலையில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் தேங்கி கிடக்கின்றன. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் குப்பைகளால் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் அதிகளவில் இருப்பதால் அதிகாரிகள், குப்பைகளை அகற்றவும், மேலும் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.