சேலம் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள அங்கம்மாள் காலனி அண்ணா நகர் 2-வது தெருவில் குப்பை கொட்டக்கூடாது என மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பு கட்டி உள்ளனர். ஆனால் அப்பகுதி மக்கள் தடுப்பையும் மீறி அந்த இடத்தில் குப்பையை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டாமல் தடுக்க வேண்டும். இல்லையெனில் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.