பழனியை அடுத்த கீரனூர் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சாக்கடை கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகளால் நிரம்பி வழிகிறது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகள் கொட்டும் இடமாக மாறிய சாக்கடை கால்வாயை விரைந்து தூர்வார வேண்டும்.