குப்பைத்தொட்டிகளை வைக்க வேண்டும்

Update: 2026-07-19 18:37 GMT

செங்கம் நகராட்சியில் சாலையோரங்களில் குப்பைக்கழிவுகள் அகற்றப்படுகிறது. அதேபோல் வீடுகளில் இருந்தும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இருப்பினும் நகராட்சி தூய்மையாக இல்லை. நகராட்சி நிர்வாகம் ராஜவீதி, ஜீவானந்தம் தெரு சாலை சந்திப்பு, பெருமாள் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு, துர்க்கையம்மன் கோவில் தெரு, தளவாநாயக்கன் பேட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆங்காங்கே குப்பைத்தொட்டிகளை வைக்க வேண்டும்.

-நாராயணசாமி, செங்கம்.

மேலும் செய்திகள்