தஞ்சை கல்லணைக் கால்வாய் ஓரத்தில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் கால்வாயில் முறையாக தண்ணீர் செல்லமுடியாமல் தேங்குகிறது. இவ்வாறு தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்பட தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கல்லணைக் கால்வாய் அருகே குப்பை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தஞ்சாவூர்.