நாமகிரிப்பேட்டை அருகே புதுப்பட்டி பேரூராட்சியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பேரூராட்சி அலுவலகம் அருகே கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அவ்வப்போது தெருநாய்கள் குப்பை கழிவுகளை கிளறி சாலையில் ெகாண்டுவந்து போட்டு செல்கின்றன. எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?