சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சாலைகளில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் அவ்ழியை செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள் இதில் எழும் துர்நாற்றத்தால் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் குப்பைகளால் அப்பகுதியினருக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.