கோத்தகிரி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.600 குப்பை வரி வசூலிக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் தினந்தோறும் முறையாக அகற்றபட்டாலும், மக்காத குப்பைகளை வியாபாரிகள் தரம் பிரித்து வைத்தாலும் ஊழியர்கள் எடுத்துச்செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே மக்காத குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.