ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் உள்ள சாலைகளின் குப்பைகள் முறையாக அள்ளப்படாமல் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் இதில் எழும் துர்நாற்றத்தால் வாகனஓட்டிகள், பாதசாரிகள் சிரமமடைகின்றனர். எனவே சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.