நெடுஞ்சாலையோரம் இறைச்சி கழிவுகள் வீச்சு

Update: 2026-10-11 16:54 GMT

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆற்காடு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் கோழிக்கழிவுகள், மீன் கழிவுகள், இறந்த விலங்குகளின் உடல்கள், குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. கழிவுகளும், குப்பைகளும் அழுகி அந்தப் பகுதி துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடாக காட்சியளிக்கிறது. கழிவுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் காற்றில் பறந்து சாலையில் கிடக்கிறது. இதனால் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. நெடுஞ்சாலையோரம் இறைச்சி கழிவுகள், குப்பைகள் வீசப்படுவதை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

-மகேஷ், ராணிப்பேட்டை. 

மேலும் செய்திகள்