கோரிமேட்டை அடுத்த பெரியக்கொல்லப்பட்டியில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த வளாகம் தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளே போகும் வழியில் தண்ணீர் நின்று அசுத்தமாக தூர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த பகுதி முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சி அளிக்கிறது. சுவரொட்டிகள் ஒட்டும் இடமாகவும் மாறி வருகிறது. இரும்பு கேட்டு இல்லாததால் சமூகவிரோத செயல் நடைபெறுகிறது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?