மோகனூர்-பரமத்திவேலூர் சாலை வள்ளியம்மன் கோவில் பகுதியில் உள்ள பாலத்தின் அருகில் குப்பைகள், கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இவற்றை அந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் எடு்த்து இழுத்துச்சென்று சாலையில் விட்டுவிடுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.