குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2026-10-18 06:59 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, கண்ணபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட உண்ணாமலை அம்மன் நகரில் சாலைஅருகே குப்பைகள் கொட்டப்படுகின்றன. அந்த பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்றில் அருகில் குப்பைகள் அதிகமாக குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசுவதோடு, அப்பகுதி மக்களுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்