வாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2026-10-25 16:23 GMT

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட், சமயபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாசன வாய்க்காலில் கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிப்போர் இதனால் அவதிக்குள்ளாவதோடு, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே வாய்க்காலில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுத்து, தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்