கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கீரணத்தம் ஊராட்சியில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தால் பெயரளவிற்கு மட்டுமே ஓரிரு இடங்களில் அகற்றப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் குப்பைகள் குவிந்து மலை போல காட்சியளிக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அத்துடன் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சரிவர செயல்படுத்தப்படுவது இல்லை. எனவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.