சுகாதார சீர்கேடு

Update: 2026-10-25 09:56 GMT

கோவை மாநகராட்சி 87-வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் மகாராஜா அவென்யூ பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அவை முறையாக அகற்றப்படுவது இல்லை. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அத்துடன் தற்போது மழை பெய்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்டப்படாமல் தடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்