காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் மெட்ரிக்குலேசன் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு அருகில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.