சென்னை கொரட்டூர் 42-வது தெருவில் நீண்ட நாட்களாக பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் சாலைகளிலேயே கொட்டப்படுகிறது. மழைக்காலம் என்பதால் அந்த பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றுவார்களா? என அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.