சேலம் ஜங்ஷனில் இருந்து முத்துநாயக்கன்பட்டி செல்லும் வழியில் பழையூர் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தெருநாய்கள் இந்த குப்பைகளை கிளறி சாலையில் இழுத்து போட்டு விடுகின்றன. இங்கு குப்பை தொட்டி வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.