ஊத்தங்கரை அடுத்த எக்கூர் ஊராட்சியில் 70 ஏக்கர் பரப்பளவில் பூசகவுண்டன் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நிலத்தடி நீரை சாமாச்சிக்கொட்டாய், காந்திநகர், எக்கூர், மகனூர்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் குடிநீர் தேவைகளுக்காக நம்பி வாழ்ந்து வருகின்றன. இந்த ஏரி பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஏரியை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.