குப்பை கிடங்காக மாறும் ஏந்தல் ஏரி

Update: 2026-11-01 14:35 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் புதுவேட்டக்குடி கிராமத்தில் உள்ள 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏந்தல் ஏரியில் ஊராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுவதால் புகை ஏற்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. எனவே ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுத்து, ஏற்கெனவே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்