புகார் எதிரொலி

Update: 2026-11-01 06:09 GMT

சென்னை கொரட்டூர் 42-வது தெருவில் நீண்ட நாட்களாக பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் சாலைகளிலேயே கொட்டப்பட்டு அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக, சாலையில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அகற்றி சரிசெய்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்