திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை பகுதியில் ஏரிக்கரை அமைந்துள்ளது. அங்கு இறைச்சி கழிவுகளை மூட்டை, மூட்டையாகக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியே செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிபடுகின்றனர். எனவே ஏரிக்கரையோரம் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், காக்கங்கரை.