ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் இச்சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதில் எழும் துர்நாற்றத்தால் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் உள்ள குப்பைகளை அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?