புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வீரப்பட்டி முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சி செங்குளம் பஸ் நிலையத்தில் இருந்து காலனி வீதி செல்லும் பாதையில் சாலையோரம் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், உரிய தூய்மை பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.