திருப்பூர் சின்னான்நகர் கிழக்கு வீதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இவை அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இதிலிருந்து கழிவுநீர் வெளியேறி ஆறுபோல் ஓடுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், காங்கயம் ரோடு காயிதே மில்லத் நகரில் உள்ள ஒரு பாலத்தில் குப்பைகள் பரவி கிடப்பதால் பாலம் அலங்கோலமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாதேஷ், திருப்பூர்.