விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் படந்தால் முனியசாமி கோவில் வடக்கு தெருவில் குப்பை தொட்டி வசதி இல்லை. தற்போது உள்ள தொட்டிகள் அடிக்கடி நிறைந்து விடுவதால் குப்பைகளை சாலையில் கொட்டும் நிலை ஏற்படுகின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் இதன் மூலமாக அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் கூடுதல் குப்பை தொட்டிகள் அமைக்க முன் வருவார்களா?