ஆட்டையாம்பட்டி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் அந்த பகுதியில் சேகரமாகும் குப்பையை சேகரித்து வாகனங்கள் மூலம் கொண்டு வந்து ஆட்டையாம்பட்டி-ராசிபுரம் பிரதான சாலை சுடுகாடு முன்பு கொட்டி மலைபோல் குவித்து வைத்துள்ளனர். மேலும் இறைச்சி கழிவுகளையும் கொட்டுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பை சேமிப்பு கிடங்கு அமைத்து அங்கு குப்பைகளை கொட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.