சேலம் ஆத்துக்காடு ஈ.பி. ஆபீஸ் தடுப்புச்சுவர் அருகே குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். இதன் அருகே உள்ள கோவிலுக்கு செல்பவர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் முகம் சுழித்தபடி செல்கின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், துர்நாற்றம் வீசுகிறது. எனவே அப்பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.