கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. மேலும் இறைச்சி கழிவுகளையும் சிலர் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.