மதுரை மாவட்டம் மேலூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், துர்நாற்றம் காரணமாக அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் குப்பைகளால் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?