திருவள்ளூர் மாவட்டம் நெய்தவாயல் அருகே உள்ள சுப்புலெட்சுமிநகர் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. ஆனால் இங்கு தார் சாலை போடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். பாதை குண்டும் குழியுமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை அமைத்து தரவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.