வேலூர் கோட்டை பூங்கா முன்பு பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நடைபாதை தள கற்கள் உடைந்து பள்ளமாக உள்ளன. இரவு நேரத்தில் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் கீழே விழுந்து செல்கின்றனர். மேலும் ஒரு சிலர் சாலையில் நடந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.