செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட மகாலட்சுமி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாகத் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் சாலையில் செல்லும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் துரத்தி கடிக்க பாய்கின்றன. இதனால் மக்கள் சாலையில் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.