விருத்தாசலம் அருகே உள்ள வி.சாத்தமங்கலம் கிராமத்தில் விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் அப்பகுதி இளைஞர்கள் வெகுதூரம் சென்று விளையாட வேண்டிய நிலை உள்ளது. இதனால் அப்பகுதி இளைஞர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே உள்ளூரில் விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள் ஏற்படுத்தித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.