மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்

Update: 2026-10-25 20:06 GMT

பொன்னை ஆற்றில் இருந்து தினமும் பலர் மணலை அள்ளி வாகனங்களில் கடத்தி செல்கிறார்கள். அத்துடன் தமிழகத்தை சேர்ந்த மணல் கொள்ளையர்கள், ஆந்திர மணல் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து பொன்னை ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி வருவாய்த்துறை, போலீசாருக்கு தகவல் தெரிவித்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இனியாவது வருவாய்த்துறையினரும், போலீசாரும் நடவடிக்கை எடுத்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்.

-கல்யாணசுந்தரம், பொன்னை.

மேலும் செய்திகள்