சார் பதிவாளர் அலுவலகத்தில் கழிவறை வசதி

Update: 2026-10-25 19:25 GMT

ஆற்காடு நகராட்சியில் சார் பதிவாளர் அலுவலகம் முப்பது வெட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. அதன் அருகே வட்டார வளர்ச்சி அலுவலகம், நீதிமன்றம், கருவூலம் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. சார் பதிவாளர் அலுவலகத்துக்கு ஆற்காடு, திமிரி, காவனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மக்கள் குறைந்தபட்சம் 3, 4 மணி நேரம் காத்திருந்து சொத்துக்களை பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆகையால் பதிவு செய்ய வரும் மக்களுக்கென தனியாக கழிவறைகள் இல்லாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெகன்நாதன், ஆற்காடு.

மேலும் செய்திகள்