ஆற்காடு பஸ் நிலையம் திறக்கப்படுமா?

Update: 2026-10-25 19:32 GMT

ஆற்காடு பஸ் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சீரமைப்பு பணி நடந்தது. தற்போது திறப்பு விழா நடத்தும் தருவாயில் உள்ளது. ஆனால், இன்று வரை பஸ் நிலையத்தை திறக்கவில்லை. இதனால் பொதுமக்களும், வெளியூர் மக்களும் அவதிப்படுகின்றனர். எந்த ஊருக்கு எந்த பஸ் எங்கு நிற்கிறது என்ற விவரம் தெரியாமல் பொதுமக்கள் பஸ் நிலையத்தை சுற்றி வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே ஆற்காடு பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறப்பார்களா?

-தேவராஜன், ஆற்காடு. 

மேலும் செய்திகள்