சுற்றுச்சுவர் அமைக்க வேண்டியது அவசியம்

Update: 2026-07-05 17:20 GMT
சிறுபாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இன்றி தற்போது முன்பக்க சுவர் முற்றிலும் இடிந்து விழுந்துவிட்டது. இடிந்து விழுந்து பல மாதங்கள் ஆகியும் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அலுவலக வளாகத்தில் உள்ள பொருட்கள் திருடு போகும் நிலையும், இரவு வேளைகளில் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் மாறிவரும் அவல நிலை உள்ளது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாாிகள் விரைந்து சுற்றுச்சுவர் அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்