நாய்களால் விபத்து அபாயம்

Update: 2026-07-05 17:21 GMT
தியாகதுருகத்தில் தஞ்சாவூரான் புறவழிச்சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் இறைச்சி கடைகள் அமைந்துள்ளன. இதனால் அப்பகுதியில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் சுற்றித்திரிவதாலும், வாகனஓட்டிகளை கடிக்க துரத்துவதாலும் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். சாலையில் அதிகளவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்