மதுபான பாராக மாறிய வணிக வளாகம்

Update: 2026-07-05 16:47 GMT

கம்பம் நகராட்சி 27-வது வார்டு பார்க் ரோடு பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட வணிக வளாகத்தில் பல கடைகள் பூட்டிய நிலையில் உள்ளன. அந்த கடைகளின் முன்பு இரவு நேரத்தில் சிலர் மதுகுடிக்க வருகின்றனர். இதனால் அந்த இடம் மதுபான பாராக மாறிவிட்டது. இதன் காரணமாக இரவில் அந்த வழியாக செல்லவே பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே வணிக வளாகம் முன்பு மதுகுடிக்க வருபவர்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்