வண்டிப்பாளையம் அருகே வடுகப்பாளையத்தில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை இரவு வேளைகளில் சாலையில் செல்லும் வாகனஓட்டிகளை கடிக்க விரட்டுகின்றன. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.