காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மணிமங்கலம் ஊராட்சியில், தாம்பரம் - ஸ்ரீபெரும்புதூர் சாலை எப்போதும் வாகனங்கள் வந்து செல்லும் பரபரப்பான சாலை. இந்த சாலையில் உள்ள மழைநீர் வடிகால் திறந்த நிலையில் உள்ளது. சாலையில் தடுப்பு இல்லாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். மேலும் கால்நடைகளும் தவறி விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனேவ மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள மழைநீர் கால்வாயை சரிசெய்யவேண்டும்.